விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமம் கிழக்குத் தெருவில் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் வாறுகால் கட்டும் பணி தொடங்கியது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக பணி முழுமையாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சென்று வர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது மழை பெய்து வருவதால் தெருக்கள் முழுவதும் சகதி காடாக இருப்பதால் நோய் தொற்றினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் நிறுத்தப்பட்ட வாறுகால் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)