• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜம்போ சர்க்கஸ் கூடம் அமைக்கும் பணி..,

நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்திற்கு அடுத்து இருக்கும் அனாதை மடம் திடலில், எதிர்வரும் 25_நாள் மாலை 7 மணிக்கு சர்க்கஸ் முதல் காட்சியை, நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன நாகர்கோவில் ரா.மகேஷ் திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிசாந்த் கிருஷ்ணா. இ.ஆ.ப.,
துணை மேயர் மேரி பிரின்ஸ்சி லதா, ஆகியோர் பங்கேற்க்கவுள்ளனர்.
மன்னர் ஆட்சி காலம் தொட்டு மக்கள் ஆட்சியான இன்று வரை நாடோடி கூட்டம் என்ற மக்களாக பாசிமணி ஊசி விற்கிற அந்த கூட்டத்தின் பாதையில் நாடோடிகளாக இருப்பது சர்க்கஸ் ஆற்றல், வீரர்கள், வீராங்கனைகள், சர்க்கஸ்யை ஒரு வியாபாரமாக
நடத்தும் தொழில் முனைவர்கள்.

சர்க்கஸ் ஒரு வலிமையான உடல் பயிற்சி. சர்க்கஸ் காட்சியில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு, இணையாக விலங்குகள் அந்த நாட்களில் இருந்த நிலை மாறி. விலங்குகள் பாதுகாப்பு என்ற அரசின் முடிவால். அந்த நாட்களில் சர்க்கஸ் காட்சியில் பயன் படுத்தப்பட்ட விலங்குகளை பயன் படுத்த அரசால் தடைவிதிக்கப்பட்டுவிட்டது.

யானை போன்ற பெரிய மிருகங்கள், சிங்கம்,புலி,கரடி என்ற விலங்குகள் இல்லாது, இப்போது சர்க்கஸ் காட்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள விலங்குகள். குதிரை, குரங்கு,நாய், மற்றும் பறவைகள் மட்டுமே.

சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகள் உலகின் எல்லா பகுதிகளிலும் நிறைந்து இருந்த அந்த காலம் இப்போது இல்லை.

நலிந்து வரும் சர்க்கஸ் இன்னும் எத்தனை காலங்களுக்கு நீடிக்கும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி குறியாக.? இருக்கும் நிலையில்.

நாகர்கோவில் எதிர் வரும் 25_ம் தேதி தொடங்கும் ஜம்போ சர்க்கஸ்.மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பொருத்தே சர்க்கஸ்யின் எதிர் காலம் கலையின் எதிர் காலம் இருக்கிறது.

தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் சர்க்கஸ் கம்பெனிகள் இருப்பதை நம்பியே இன்றைய சர்க்கஸ் கலைஞர்களின் எதிர் காலமும் இருக்கிறது என்பதே இன்றைய உண்மை.

ஜம்போ சர்க்கஸ்யில் இந்திய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களுடன் பல்வேறு மேலை நாடுகளை சேர்ந்த கலைஞர்களும், நாகர்கோவிலில் நடக்கவிருக்கும் ஜம்போ சர்க்கஸ்யில் பங்கேற்க இருக்கிறார்கள்.

சர்க்கஸ் எந்த பகுதிகளில் நடந்தாலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சர்க்கஸ் என்னும் ஒரு உன்னதமான கலையை நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.