அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிப்படுத்தியதாக கூறி, அவரை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று மாலை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள் சோணை, செந்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ்கண்ணா, நகரத் தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் ஸ்ரீவித்யா, இமயமடோனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
