• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாசறை மாநாட்டிற்கு காங்கிரஸ் கட்சியினர் வாகனத்தை தொடங்கி வைத்தனர்…

ByM.maniraj

Nov 4, 2023

கழுகுமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் மரியதங்கராஜ் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெறும் வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியினர் கழுகுமலையில் இருந்து வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட துணை தலைவர் கந்தசாமி ஆகியோர் மாநாடு வாகனத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக நடந்த ஊழியர் கூட்டத்தில் நகர செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜோதி, மகளிரணி தலைவி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர் மலர், 15 வது வார்டு தலைவர் ராஜசேகர், பாலையா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.