• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்: அமித்ஷா தாக்கு

ByA.Tamilselvan

Nov 3, 2022

காங்கிரஸ்கட்சிக்கு எதிர்காலம் இல்லை..அது ஒரு மூழ்கும் கப்பல் என இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித்ஷா பேச்சு
இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது ….. மோடி, களைப்பின்றி நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இத்தகையவர்தான் நாட்டையும், மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது. பொய்யான முழக்கங்களை எழுப்பி, மக்களை முட்டாளாக்க பார்க்கும்.காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இந்திய அரசியல் அரங்கில் இருந்தே காங்கிரஸ் வெளியேறி விடும் என பேசினார்.