விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேவதானம் அருகே மதுரை விநாயகர் கோவிலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார் விருதுநகர் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி துணை தலைவர் பெர்னட் மற்றும் இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் துணை தலைவர் L. தளவாய்பாண்டியன் முன்னிலையில் வைத்தார். .

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்
எஸ் தளவாய்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஆலோசனை வழங்கினர் .

முகவூர் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் பவனம் 1975 ம் ஆண்டு அப்போதைய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னமராஜா தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது அத்த இடத்தை தற்போது டிரஸ்ட் என்ற பெயரில் தனி நபருகள் ஆக்கிரமித்து உள்ளனர் அதை மீட்க நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

மேலும் திமுக விடும் காங்கிரஸ் அடிமை போல் உள்ளது திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை மதிப்பதே கிடையாது ஒரு வேலை வாய்ப்பு இருந்தால் அதில் கூட காங்கிரஸ் கட்சியினர் பணியாற்றினால் அந்த பணியை கூட அமைச்சர்கள் மிரட்டி வெளியேற கூறும் நிலை உள்ளது என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

தொண்டர்கள் கருத்திற்கு பதிலளித்த முன்னாள் மாவட்ட தலைவர் எஸ் தளவாய் பாண்டியன் பேசும்போது காங்கிரஸ் இல்லை என்றால் திமுக முதல்வராக இருக்க முடியாது. நமது காங்கிரஸ் கட்சி ஓட்டு வைத்து தான் திமுக ஆட்சியில் அமர்த்திருக்கிறது ஆகையால் நமது காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சிறப்புரையற்றினார்.




