• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அகஸ்தீஸ்வரத்தில் அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற முதல் கட்ட பொது தேர்தலில். இந்தியாவின் தென் கோடி எல்லையான, தமிழகத்தின் 39_வது நாடாளுமன்ற தொகுதியில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் அரசுப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்கை பதிவு செய்வதற்கு முன் அவரது தந்தை வசந்த குமரின் நினைவிடத்தில் சென்று வணங்கிய பின்பு,வாக்கு மையத்தின் அருகில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் சென்று வணங்கிய பின். அகஸ்தீஸ்வரத்தில் அரசு பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் சென்று அவரது வாக்கை பதிவு செய்தார் அதன் பின் செய்தியாளர்களிடம் வசந்த குமார் தெரிவித்தவை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை என்பது மிகப்பெரிய ஜனநாயக கடமையை ஒவ்வொரு இந்தியனும் அவர்களது உரிமை பெற்ற உரிமையான வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டவர். இந்த தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 3_லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்தார்.