செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி,
கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு, கண்காணிப்பு குழு மூலமாக அனைத்து வங்கி பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.ஜி பே எனப்படும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில், அதிகமாக பண பரிவர்த்தனை எந்த கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.