இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவுக்கு உலகின் தலைசிறந்த செஸ் வீரர் என்று புகழப்படும் கெர்ரி காஸ்பரோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வரும் குஐனுநு உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் பிரக்ஞானந்தா உலகின் முதல் நிலை செஸ் வீரரான மஃனஸ் கார்ல்சனை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ள இருக்கிறார். நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பேபியானோ குருவனா-வை தோற்கடித்தார்.
இது குறித்து தனது ட்விட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த செஸ் வீரர் காஸ்பரோவ்,
“பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் என்னுடன் எனது அம்மா துணையாக இருந்த பெருமைக்குரியவர் என்ற முறையில், இது ஒரு சிறப்பான ஆதரவு!
இரண்டு அமெரிக்கர்களை வீழ்த்திய சென்னை இந்தியன்! கடினமான நிலைகளில் மிகவும் விடாப்பிடியாக இருந்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.