நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை கல்லூரி மாணவர்களுக்கு குமரி மக்கள் பிரதிநிதிகள் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் விபத்தில் மரணம் அடைந்த சக மாணவர் ஒருவரும், மாணவிகள் இருவரின் நிழல் படங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், கல்லூரி அனைத்துத்துறையை சேர்ந்த பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
குமரி மாவட்டத்தையே இந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



குமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் அவர்களது முக நூல் பதிவில் அவர்களது இரங்கலை பதிவிட்டுள்ளார்கள்.

கேரள மாநிலத்தின் மூணாறு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் உட்பட்ட சுற்றுலா பேருந்து உரிய சுற்றுலா அனுமதி பெறாது இயக்கப்படுவதும், விபத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து இரண்டு மினி வேன்களில் ஏற்றி சென்று களியக்காவிளையில் நின்ற கேரளாவில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பேருந்தில் ஏற்றி சென்ற தகவல்கள் தற்போது குமரியில் காட்டு தீயாக பரவி வருகிறது.

தமிழக அரசின் உரிய போக்குவரத்து உரிமம் பெறாமல் கேரளவில் உரிமம் பெற்ற வாகனங்கள் குமரி மாவட்டத்தில் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டத்தில் இயங்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள். குமரியில் உரிய சுற்றுலா உரிமம் பெறாத வாகனங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுவான குரல் வலுத்து வருகிறது.





