• Sun. Mar 16th, 2025

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை அகற்றும் ஆணைக்கு கண்டனம்..!

இந்திய அரசியல் சட்டத்தின் “தந்தை” என போற்றப்படும் முனைவர் அம்பேத்கர் படம் நீதி மன்றங்களில் இருந்து அகற்றும் ஆணைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி தந்த, இந்திய சட்டத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர் அம்பேத்கர் படங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதி மன்றங்களில் இருந்து அகற்ற வேண்டும்.

இனி நீதிமன்றங்களில் தேச தந்தை மகாத்மா காந்தி மற்றும் உலகபொதுமறை தந்த திருவள்ளுவர் படங்கள் மட்டுமே வைக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கையினை கண்டித்து, நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமத்துவக் கட்சியினை சேர்ந்த வழக்கறிஞர்கள் நாகர்கோவில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சென்னை உயர் நீதிமன்ற பதிவு துறை அணையை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள்.