• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சங்கு ஊதும் ஆர்ப்பாட்டம்

Byஜெ.துரை

Jan 10, 2023

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கருப்புக்கொடி மற்றும் சங்கு ஊதும் ஆர்ப்பாட்டம்
சென்னை சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின் போது முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென வெளிநடப்பு செய்தார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு சட்டசபையில் மரபை மீறிய ஆர்.என் ரவிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கருப்புக்கொடி மற்றும் சங்கு ஊதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சாலை மறியில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.