• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“தோழர் சேகுவரா” திரை விமர்சனம்!

Byஜெ.துரை

Sep 18, 2024

க்ரெய் மேஜிக் கிரேய ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அனீஸ் தயாரித்து ஏ.டி.அலெக்ஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தோழர் சேகுவரா”. இத்திரைப்படத்தில் இயக்குனர் ஏ.டி.அலெக்ஸ் படத்தின் நாயகனாக (நெப்போலியன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சத்தியராஜ், நாஞ்சில் சம்பத், ராஜேந்திரன், கூல் சுரேஷ், அனீஸ், நீல்ஆனந்த் உட்பட மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏழை குடும்பத்தில் பிறந்த நாயகன் ஏ.டி.அலெக்ஸ் (நெப்போலியன்) 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டு மேல் படிப்பு படிக்க முடியாமல் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

மறு பக்கம் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்யராஜ் (சேகுவாரா) அந்தக் கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பின்னணியில் அங்கு நடக்கும் அநீதி, அக்கிரமங்களுக்கு துணை நிற்கின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந் நிலையில் கல்லூரியின் நடக்கும் நுழைவுத் தேர்வில் நாயகன் அலெக்ஸ் (நெப்போலியன்) வெற்றி பெற்று இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே சாதிய வன்முறைக்கு ஆளாகிறார்.
உடன் படிக்கும் சக மாணவர்கள் மூலமாக மட்டும் இன்றி சில பேராசியர்கள் மூலமாகவும் சாதிய வன்முறைக்கு ஆளாகும் அலெக்ஸ், அனைத்தையும் பொறுத்து போகிறார்.

ஒரு கட்டத்தில் சாதிய வன்முறைக்கு எதிராக எழுச்சியாகவும், புரட்சியாகவும் வெடிக்கின்றார். இதன் பிறகு அலெக்ஸ் ஐந்து வருட பொறியியல் கல்லூரி படிப்பை முடித்தாரா? அவருக்கு ஏற்பட்ட அநீதிகளை எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதுதான் படத்தின் மீதி கதை. நாயகனாக நடித்திருக்கும் ஏ.டி.அலெக்ஸ், கதாபாத்திரமாக வாழ்த்துள்ளார்.

சில காட்சிகளில் மட்டுமே திரையில் தோன்றினாலும் சேகுவாரா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சத்யராஜ் “சேகுவாரா” திரைப்படம் என்ன சொல்லவிருக்கின்றது என்பதை தனது பின்னணி குரலிலும் பஞ்ச் டயலாக்குகளிம் சொல்லி தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் அனிஸ் (கலியபெருமாள்) என்ற கதா பாத்திரத்தில் நடித்திருக்கும அவர் கவனம் ஈர்க்கிறார். நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் கதா பாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.

சாம் அலன், ஒளிப்பதிவு அருமை. பி.எஸ்.அஸ்வின் இசை கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது.

மொத்தத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவன் ‘தோழர் சேகுவேரா’