• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மகிழ்ந்த பவன்கல்யாண் நன்றி சொன்ன இசையமைப்பாளர் தமன்..

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெலுங்கில் முன்னனி நடிகராக உள்ள பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை சாஹர் சந்திரா என்பவர் இயக்கியுள்ளார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் திரைக்கதை அமைத்துள்ளார். வரும் பிப்-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளதுதமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பீம்லா நாயக் படத்தில் தலைப்பு பாடலை தெலங்கானாவை சேர்ந்த தர்ஷனம் மொகுலையா என்கிற நாட்டுப்புற பாடகரை அழைத்து பாட வைத்திருந்தார் தமன். தற்போது பின்னணி இசைக்கோர்ப்பு எல்லாம் முடிந்து மொத்த படத்தையும் பார்த்த பவன் கல்யாண் உற்சாகமாக இசையமைப்பாளர் தமனை கட்டியணைத்து பாரட்டியுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள தமன், இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்காக இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.