• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மருத்துவர்கள் இல்லாமல் கருக்கலைப்பு செய்வதாக புகார்.., சுகாதாரத்துறை இணை இயக்குனர் திடிர் ஆய்வு…

ByG.Suresh

Nov 30, 2023

சிவகங்கையில் காந்திவீதி பகுதியில் அரசு அனுமதி இன்றி கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீர்த்தி வாசன் துணைபோலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மருத்துவ கிளினிக்கில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமலும் அனுமதி பெறாததும் உள் நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததை அடுத்து அந்த கிளினிக்கு பூட்டு போட்டு பூட்டினர். மேலும் கிளினிக்கில் இருந்த ஒரு பெண்னை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கிளினிக்கில் இந்த மருத்துவர் வருவதே இல்லை என்றும் வேறு மருத்துவர் ஒருவர் பணிப்பெண்ணெய் வைத்து கருக்கலைப்பு செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சிவகங்கை பொறுத்தவரை அரசு மருத்துவர்கள் பெரும்பாலானோர் கிளினிக் நடத்துவதும் கிளினிக் உள்ளேயே மாத்திரை மருந்து விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.