புதுகோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மாவூர் கிராமத்தின் புல எண் 234 மற்றும் 233 ஆகிய இடங்கள் அரசு புறம்போக்கு இடமாகும். இந்த இடத்தில் 24 ஏக்கர் இடம் இருப்பதாகவும் இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு கிரஷர் உரிமையாளர்கள் 8 வருட காலமாக சட்டவிரோதமாக குவாரி அமைத்து 1000 கோடி மதிப்பிலான கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்திருப்பதாகவும்,

இதனால் கிராமத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழலில் இருப்பதாகவும் சுமார் 400 அடி ஆழத்திற்கு கீழ் கல்குவாரி அமைத்து கனிமங்களை எடுப்பதால் கிராம மக்கள் சிரமம் அடைந்து இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வள அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர். மாவூர் கிராமத்தினர் மேலும் அங்கு நடக்கும் விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.