• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

ByP.Kavitha Kumar

Jan 11, 2025

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த நிலை முற்றிலுமாக மாறி, மத்திய அரசே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதுபோல, தமிழ்நாட்டிலும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்துதான் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் எழிலரசன் (திமுக) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றி கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு: ” புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு அடிப்படை நோக்கமாகும்.

இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக்கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை.
விரைவில் அந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதலின் படி அந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்று கூறினார்.