அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திமுக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கலைஞர் நூற்றாண்டு ஏறுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலை வகித்தார் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டாக உறுதிமொழி ஏற்றனர். ஆன்லைன் பதிவு மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கு பரிசோதனை செய்து வாடிவாசலில் இறக்கப்பட்டது பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் முதல் சுற்றில் இறங்கினர். காளை உரிமையாளர்களுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள் கட்டில் பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
