• Sat. Apr 27th, 2024

விரைவில் ஒடிடியில் வெளியாகிறது நானே வருவேன்..!!

ByA.Tamilselvan

Oct 23, 2022

நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இடைவேளைக்கு முந்தைய காட்சி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடித்தளத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமான தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *