• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்துமஸ் முன்னிட்டு தயாராகும் வண்ணமயமான கேக்குகள்

கடந்த ஆண்டுக்கான ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக கொண்டாட முடியாமல் போனதால் கிறிஸ்மஸ் பண்டிகை இந்த முறை மிகுந்த உற்சாகத்துடன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மார்த்தாண்டம் தக்கலை குலசேகரம் கருங்கல் மற்றும் கடற்கரை கிராமங்கள் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வீடுகளில் குடில் அமைப்பு அலங்கார மின் விளக்கு அமைப்பு தேவாலயங்களில் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவிலில் உள்ள பேக்கரி கடைகளில் விதவிதமான கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிளம் கேக் வகைகளை மக்கள் அதிகம் வாங்கி விரும்பி செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் அளவுக்கு அதிகமாக விற்பனை நடைபெறுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர.

மேலும் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள மாவட்டம் என்பதால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு.