• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகளை நட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் !

Byஜெ.துரை

Mar 5, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள சீமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மேட்மேட்ரிக்ஸ் விழாவின் ஒரு அங்கமாக சுமார் 500 மரக்கன்றுகளை மாணவ,மாணவியர்கள் பேரணியாக வந்து கீழச்சேரி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நட்டு வைத்தனர்.

இது குறித்து அக்கல்லூரி பேராசிரியை பிரீடா கூறுகையில்,

உலக வனவிலங்குகள் தினத்தினை முன்னிட்டு எங்கள் கல்லூரி மாணவர்கள் பேரணியாக வந்து கீழச்சேரி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நடுகின்றனர்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நோக்கத்தை முன் உதாரணமாக கொண்டும் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவும், கல்லூரி அளவில் செய்து வந்த இம்மர கன்றுகள் நடும் விழாவை முதல் முறையாக இன்று கிராமங்களில் தொடங்கியுள்ளோம்.

முன்னேற்றம் எனும் பெயரில் மரங்கள் வெகுவாக அழியப்பட்டுள்ளன.
மாணவர்களின் இத்தகைய முயற்சியால் மரங்கள் பாதுகாக்கப்படும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மேன்மை பெறும்.

இதற்கு வாய்ப்பளித்த கல்லூரி முதல்வர் வீரையன், இயக்குனர்கள் தீபக் மற்றும் ரம்யா தீபக், கணித துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட அணைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
என்று கூறினார்.