மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக அநத பகுதி முழுவதிலும் திமுக கட்சி கொடிகள் நடப்பட்டன
இந்நிலையில் திமுக கூட்டம் முடிவடைந்து மாலை திமுக வரவேற்பு கொடி கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்த நவின்குமார் (18) என்ற கல்லூரி மாணவன் கொடிகம்பியை அகற்றிய போது, மின்சாரம் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரி மாணவன் மின்விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.