



தாம்பரம் அருகே ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்பாக்கத்தை சேர்ந்தவர் விஷ்வா (வயது-20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., கிரிமனாலஜி, மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று திருமால்பூர்–கடற்கரை இடையே சென்ற புறநகர் விரைவு ரயிலில், கல்லுாரிக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது, ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், விஸ்வா தொங்கிக்கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாம்பரம் அருகே ரயில் வந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்த விஸ்வா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
உடனே தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடல் ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

