• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி அருங்காட்சியகத்தில் கல்லூரி அளவிலான பேச்சு, கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகமும் குமரி மாவட்ட பாரதியார் சங்கமும் இணைந்து கல்லூரி அளவிலான மாணவ மாணவிகளுக்கு பாரதி கண்ட புதுமைப்பெண் என்கிற தலைப்பில் பேச்சு போட்டியும் சரித்திர தேர்ச்சிக்கொள் என்கிற தலைப்பில் கவிதை போட்டியும் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட காப்பாட்சியர் திருமதி சிவ. சத்தியவள்ளி போட்டிகளை துவங்கி வைத்தார்.


இப் போட்டிகளில் குமரி எழிலன்,முனைவர். ஜெயசீலி ,மயூரி சீதாராமன், முல்லை செல்லத்துரை ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கன்னியாகுமரி கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார். கவிதை போட்டியில் வெற்றி தெ.தி இந்து கல்லூரி மாணவர்கள் ரேணுகா தேவி , அஸ்வத் மற்றும் ஆஷா ஆகியோரும் பேச்சுப் போட்டியில் சிவ சியாமிலி, இந்து கல்லூரி, டேப்சி நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி , தரணி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி, கிஷோர் ,ரோகிணி பொறியியல் கல்லூரி ஆகிய மாணவ மாணவிகள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பாரதியார் சங்க தலைவர் ஜெயமதி ரோசாறியோ, துணைத்தலைவர் ஜெயசீலி, செயலர் கீதா மற்றும் அருங்காட்சியக பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர். நிகழ்வில் தெ. தி இந்து கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர். பென்னி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.