7.5% இட ஒதுக்கிட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகையான கட்டணங்களையும் அரசு கல்லூரிகளுக்கு செலுத்துவதில் அரசு மெத்தனம் காலதாமதமாக கட்டணங்களை அரசு கல்லூரிகளுக்கு வழங்குவதால் மாணவர்களை கல்லூரிகள் அந்த பணத்தை கட்ட மாணவர்களுக்கு நிர்பந்தம்.
அரசு பணம் தந்தவுடன் நாங்கள் கட்டணத்தை திருப்பித் தருகிறோம் என்று கூறி கட்டாய வசூல் செய்கின்றனர்.

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பி டி எஸ் படிப்பை முடித்துவிட்டு சுயநிதி கல்லூரிகளுக்கு பயிற்சிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் இரண்டரை லட்சம் பணம் கட்ட சொல்லி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்துகின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் பிரதமர் மோடியும் அதற்கு சம்மதித்து விட்டார்.
நான்கு மத்திய அமைச்சர்களிடம் தமிழகத்திற்கு நீட் விளக்கு அளிப்பதற்கு உண்டான கையெழுத்தை பெற்று விட்டோம். ஐந்தாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே பி நட்டாவை சந்திக்க போகும் போது தான் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு கட்டாயம் இருக்கும் என்று தீர்ப்பு கூறியது அன்றைய தினம் மட்டும் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் கட்டாயம் அதிமுக ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்.
முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர்,
நீட் ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகாலம் ஆகியும் இதனால் வரை நீட்ட ரத்து செய்யாமல் அரசு இருப்பதால் 22 உயிர்கள் பரி போய் உள்ளது. அதற்கு கண்டனம் தெரிவித்தும் இறந்த மாணவ மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அதிமுக மாணவரணி சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலியும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் 500க்கும் மேற்பட்ட மாணவர் அணி மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்.
முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நான் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு நீட் விளக்கு வேண்டும் என்று கூறிய போது பிரதமர் மோடி அதற்கு சம்மதித்து நான்கு மத்திய அமைச்சர் கையெழுத்தை பெற்று விட்டோம். ஐந்தாவதாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நட்டாவை சந்தித்து கையெழுத்து வாங்க போகும் போது தான் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு கட்டாயம் இருக்கும் என்று தீர்ப்பை அளித்தனர்.
அதனால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை உச்சநீதிமன்றம் அன்றைய தினம் தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்.
7.5% இட ஒதுக்கிட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகையான கட்டணங்களையும் அரசு கல்லூரிகளுக்கு செலுத்துவதில் அரசு மெத்தனம் காலதாமதமாக கட்டணங்களை அரசு கல்லூரிகளுக்கு வழங்குவதால் மாணவர்களை கல்லூரிகள் அந்த பணத்தை கட்ட மாணவர்களுக்கு நிர்பந்தம் அரசு பணம் தந்தவுடன் நாங்கள் கட்டணத்தை திருப்பித் தருகிறோம் என்று கூறி கட்டாய வசூல் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.
7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பி டி எஸ் படிப்பை முடித்துவிட்டு சுயநிதி கல்லூரிகளுக்கு பயிற்சிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் இரண்டரை லட்சம் பணம் கட்ட சொல்லி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்துகின்றனர்..
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதற்கு அதிமுக சார்பில் தனி கவணியிறப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு மனு அளித்தும் இது நாள் வரை அரசு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவில்லை இது கண்டனத்துக்குரியது
என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.