• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பால் பாக்கெட்டுகளை வெளியிட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 17, 2026
புதுச்சேரி  சட்டமன்ற  தேர்தல ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 09ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் கையிலும் 100% வாக்குப்பதிவை காரைக்கால் மாவட்டத்தில் உறுதி செய்யும் வகையிலும் காரைக்கால் மாவட்ட மக்கள் இடையே விநியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைத்து மக்களிடையே விநியோகம் செய்யும் நடைமுறையினை ஆட்சியர் இஷிதா ராட்டி இன்று துவக்கி வைத்தார். 

காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம்  நாள் ஒன்றுக்கு சுமார் 30ஆயிரம்  பால் பாக்கெட்களில் விழிப்புணர்வு வாசகங்கள் சீல் வைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் ஒரு மாத காலம் இந்த வாசகங்கள் அடங்கிய பால் பாக்கெட்டுகள் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் பாக்கெட் களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கும் முறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.