• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு..,

ByK Kaliraj

Nov 13, 2025

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் சுகபுத்ரா,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தாயில்பட்டி அருகே உள்ள கீழகோதைநாச்சியார்புரம் தார்ச்சாலை,சாத்தூர் – பி.திருவேங்கடபுரம் செல்லும் தார் சாலை, தாயில்பட்டியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டு,புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கி தரமாக போடவேண்டும் என அலுவலர்களிடம் உத்தரவிட்டார், தொடர்ந்து, எட்டக்காபட்டி கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூபாய் 34 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்றத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து  என்பத்து ஐந்தாயிரம் மதிப்பில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து தாயில்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், 

பதினைந்தாவது மானியக்குழு நிதியின் கீழ் ரூபாய்.41.35 லட்சம் மதிப்பில் தாயில்பட்டி ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி, வெம்பக்கோட்டை ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.