தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர்மாவட்டம் ,ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கலெக்டர் பொ. இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் முகாமில்மருத்துவ சேவைகள் வழங்கப் படுவது குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறன் நபர் களுக்கு நலத்திட்ட உதவிகளும், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில்கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகங் களும், தாட்கோ மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் உதவித் தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இந்தசெய்தியாளர்கள் பயணத்தின் போது இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.மாரிமுத்து, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மணிவண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட நிலை அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




