பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரகாளியம்மன் திருக்கோவில் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மதி அங்காடியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்திடும் பொருட்டு, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் “மதி அங்காடி” அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்தை தொடர்ந்து, பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்திடும் பொருட்டு மதுரகாளியம்மன் கோவில் அருகில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் “மதி அங்காடி” கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பணியினை திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு தரமாகவும், விரைந்து முடித்து மகளிர் குழுவிடம் ஒப்படைத்திட வேண்டும். கடையை நிர்வாகிக்க உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு போதிய பயிற்சி வழங்கிட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ச.வைத்தியநாதன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சங்கர், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார் ,இமயவர்மன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.