• Mon. May 13th, 2024

கோயம்புத்தூரில் டபுள் டக்கர் பஸ் அறிமுகம் துவக்கி வைத்த கலெக்டர்,போலீஸ் கமிஷனர்

BySeenu

Dec 25, 2023

டபுள் டக்கர் பேருந்து என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் இருக்கும்.இந்த டபுள் டக்கர் பஸ்சானது இந்தியாவில் 1920-ம் ஆண்டு கொல்கத்தா நகரில் முதலில் இயக்கப்பட்டது.அப்போது பிரிட்டிஷ் அரசு இதனை இயக்கி வந்தது.இதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களில் இயக்கப்பட்டது.தமிழ்நாட்டை பொறுத்த வரை பாலங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வந்ததால் இந்த டபுள் டக்கர் பேருந்து சேவையானது 2008ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.இதனிடையே பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக டபுள் டக்கர் பேருந்தை கோயம்புத்தூர் விழாவில் மீண்டும் அறிமுகம் செய்தனர்.இந்த ஆண்டு 16வது பதிப்பாக துவங்கியுள்ள கோவை விழாவில் இரண்டு டபுள் டக்கர் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளனர்.இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இதுகுறித்து கோயம்புத்தூர் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,கோயம்புத்தூர் நகரின் பெருமைகளை கொண்டாடும் வகையில் கோயம்புத்தூர் விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து மூலம் கோவை நகரை பொதுமக்கள் சுற்றி பார்க்க கொண்டு வந்துள்ளோம்.இன்று டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யவும், பிரத்தேக மொபைல் செயலி மூலம் பயணத்தை முன்பதிவு செய்யலாம் எனவும் இந்த பஸ் வ.உ.சி பார்க் கேட்டில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் இதே இடத்திற்கு வந்து சேரும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *