• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இரவில் குளிர் நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

ByA.Tamilselvan

Jan 7, 2023

தமிழக முழுவதும் இன்னும் 8 தினங்களுக்கு இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகம் உள்ள தலைநகர் சென்னையிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடும்பனி காரணமாக விமானம்,ரயில் உட்பட வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிளது இந்நிலையில் ஜனவரி 15-ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் மழை முடிவுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24-25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, ‘ஜனவரி நடுப்பகுதியில் இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை நகர தொடங்கும். இது இரவு வெப்ப நிலையை குறைக்கலாம். அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழையை எதிர் பார்க்கலாம். அதன் பிறகு வறண்ட வானிலை இருக்கலாம்’ என்றனர்.