• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கோவையில் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி ஜூன்-21ல் துவக்கம்

BySeenu

Jun 18, 2024

சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி – வரும் ஜூன் 21 ஆம் தேதி கோவையில் துவங்க உள்ளதாக தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தினர் பேட்டி அளித்தார்.

கோவையில் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி வரும் ஜூன் 21 ஆம் தேதி கோவையில் நடக்க உள்ளதாகவும்,சுமார் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் அலுவலகத்தில் அச்சங்கத்தின் தலைவர் சுந்தரராமன் ,துணை தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

நாட்டில் ஜவுளி என்பது மிக முக்கியத்துவத்தில் ஒன்றாக உள்ளது. அத்தகைய ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த விற்பனையில் 3சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், 4முதல் 6சதவீதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிக்க ஜவுளி தொழில் துறையினர் செலவினம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜவுளி தொழில்துறையினருக்கு ஒரே கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் கோவையில் வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் சர்வதேச அளவில் கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவித்தனர். குறிப்பாக உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்கிவிப்பதும் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் இந்த கண்காட்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் மேற்குவங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் டையூ, தாத்ராநகர்,ஹாவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் , ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஜப்பான், சீன நாடுகளை சேர்ந்த 240 ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த கண்காட்சியின் மூலம் ரூபாய் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் எனவும், சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.