அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் CNESS இன்க் நிறுவனம், தனது விழிப்புணர்வு சார்ந்த டிஜிட்டல் சூழலமைப்பு மென்பொருளை சென்னையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுக விழா, சென்னையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், CNESS சூழலமைப்பின் முக்கிய தளங்களான CNESS கான்ஷியஸ்னஸ் சூப்பர் ஆப் (B2C) மற்றும் CNESSWorks (B2B) ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் கூட்டுச் சூழல் அமைப்புகளுக்கான புதிய பார்வையை வெளிப்படுத்தும் இந்த விழாவில், தொழில் துறை தலைவர்கள், புதுமையாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CNESS நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆதிபென் போஸ் நந்திஜி, இந்த மென்பொருள் குறித்து பேசுகையில், “CNESS கான்ஷியஸ்னஸ் சூப்பர் ஆப் என்பது அர்த்தமுள்ள தொடர்புகள், விழிப்புணர்வான ஈடுபாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை உருவாக்கும் அடுத்த தலைமுறை சமூக தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “CNESSWorks (B2B) தளம் நிறுவனங்களுக்கு நம்பகத்தன்மை, பிராண்ட் மதிப்பு மற்றும் உலகளாவிய இணைப்புகளை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தலைமையிடமாக இருந்தாலும், இந்த மென்பொருள் முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகவும், அதனால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீராம் கேப்பிட்டலின் டி.ஜி. ராஜன், தொழிலதிபர்கள் சுஷாந்த் சௌத்ரி, ஜெய அமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



