தென்காசி வனக்கோட்டம் குற்றாலம் காப்புக்காடு மற்றும் பழைய குற்றாலம் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், ஷாம்பு,சோப்பு தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்தும் அருவி வரை உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி IFS அவர்கள் தலைமையில் தென்காசி உதவி வன பாதுகாவலர் நெல்லைநாயகம் , குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி நாட்டு நல திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, ரெஜிகண்ணா மற்றும் 42 மாணவியர்கள் தூய்மை பணியில் கலந்து கொண்டார்கள்.

நெகிழி அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது தென்காசி வனச்சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இப்பணி அனைத்தையும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்றைய தூய்மைப் பணியில் பழைய குற்றாலம் சோதனை சாவடி மற்றும் அருவி பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் நெகிழி பைகள் சேகரம் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.