• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் சிஐடியு அவதூறு பிரச்சாரம்

போக்குவரத்து ஊழியர்களுக்கான சீருடை விவகாத்தில் எங்களுடன் கூட்டணி வைத்துள்ள சிஐடியு வை சேர்ந்தவர்கள் திமுக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் சீருடை வாங்காமல் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று திண்டுக்கல் தேனி மண்டலத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் சுமார் 6400க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நடத்துனார்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக ஓட்டுநர் நடத்துனர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை வழங்கவில்லை . தற்போதைய திமுக அரசு ஓட்டுநர் நடத்துனரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஓட்டுனர் நடத்துனர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என அறிவித்தது அதன்படி நேற்று முதல் திண்டுக்கல் தேனி மண்டல போக்குவரத்து கழகத்தில் பணி செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் சீருடை 40 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முழுவதுமாக 100% முடிவடைந்து விடும் .இந்நிலையில் திமுக கட்சியில் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி ஐ யூ ஊழியர்கள் திமுக ஆட்சியை சீர்குழக்கும் நோக்குடன் தங்களுக்கு சீருடை வழங்கவில்லை எனக் கூறி வருகின்றனர். நாங்கள் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து ஓட்டுனர் நடத்தினர்களுக்கும் சீருடை வழங்கி வருகிறோம். அவதூறு பிரச்சாரம் செய்யும் சிஐடியு நிர்வாகிகள் மீது அவர்களின் கட்சியின் தலைமைக்கும் தெரிவித்து விட்டோம் .ஆனால் இவர்கள் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தொடர்ந்து அனைத்து பணியாளர்களுக்கும் சீருடை வழங்கி வருகிறோம் என்று தோ மு ச மண்டல செயலாளர் செந்தில் கூறினார் மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக கட்சியினர் தங்களை புறக்கணிப்பதாக கூறி தங்களுக்கு சீருடை வழங்கவில்லை என கூறி வருவதால் ஓட்டுநர் சங்கத்தினரிடையே இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது