மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராமலிங்க சாமி சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.