

சோழவந்தான் பேட்டை கிராமத்தில் உள்ள வெள்ள பிள்ளையார் கோவில், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு மேலூர் தெற்குதெரு மலை காசிராஜன் தலைமையில் மூன்று நாட்கள் யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து நான்காம் காலையாக கேள்விகள் நடைபெற்று கோபூஜை, நாடி சாந்தினம், வேத பாராயணம், பூர்ணாஹீதி நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். கருட ஜெபம் நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்புஅர்ச்சனைகளும், பூஜைகளும் நடைபெற்றன. பச்சைவள்ளி காளியம்மன் கோவில் பூசாரி கிருஷ்ணசாமி பிரசாதம் வழங்கினார். பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
