• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

ByN.Ravi

Apr 16, 2024

மதுரை, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் . இதைத்தொடர்ந்து, 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும்.
இதேபோல், இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 3மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. நேற்று மாலை வான வேடிக்கை மேளதாளத்துடன் சண்முகவேல் பூசாரி மூன்று மாத கொடிக்கம்பத்தை எடுத்து வந்தார். இவருடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர். சில பக்தர்கள் சாமியாடி வந்தனர். இந்த மூன்று மாதக் கொடி கம்பம் எடுத்துக் கொண்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதுவீதி, வழியாக வைகைஆற்றுக்குச் சென்று அங்கு மூன்று மாத கம்பத்தை வைத்து பூஜைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து வடக்குரதவீதி, கடைவிதி, மாரியம்மன்சன்னதி வழியாக கோவிலை
வந்தடைந்தனர். கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிபீடத்தில் மூன்று மாதகொடி ஏற்றும் விழா நடந்தது.
பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி, வசந்த் ,மற்றும் உபயதாரர் சோழவந்தான் காவல் ராசு
அம்பலம் குடும்பத்தினர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்இன்ஸ்பெக்டர் சேகர் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.