• Wed. Mar 26th, 2025

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

ByN.Ravi

Mar 18, 2024

சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு தலைமை ஏற்று இறை வேண்டுதல் நடத்தினார் பள்ளி முன்னாள் மாணவர் பொறியாளர் காசி, பள்ளி கௌர ஆலோசகர், வர்த்தகர்கள் சங்கத் செயலாளர் ஆதி. பெருமாள், எல்ஐசி முத்துராமன், அலங்காநல்லூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.உதவி ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் வரவேற்றார். இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பிராங்கிளின் நினைவாக பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வழங்கினார். ஏ.என். ஆதிமூலம்பிள்ளை சரஸ்வதிஅம்மாள் நினைவாக பள்ளியின் இரண்டு மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுன்சிலர் சத்திய பிரகாஷ் வழங்கினார். வட்டாரகல்வி அலுவலர்கள் ஷாஜகான் அகிலத்துஇளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் பரிசு வழங்கினார்கள். ராயபுரம் ஆர்.சி பள்ளி தலைமையாசிரியை பணிமாதா, சோழவந்தான் ஆர்.சி பள்ளி தலைமையாசிரியை சாந்திஅமலாஜோஸ்பின், பகல் நேரபாதுகாப்பு மையஆசிரியை தேவிகா,உதவி ஆசிரியைகள் பிரேம்குமாரி, கிருஷ்டி ஜெயஸ்டார்,திவ்யா ஆகியோர் பேசினார்கள். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி ஆசிரியை வனிதா சாந்தகுமாரி நன்றி கூறினார்.