சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். உதவி ஆசிரியர் ஏஞ்சலின் சுகந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின், ஆசிரியர் பயிற்சிநர்கள் சரண்யா, லட்சுமி ஆகியோர் பரிசு வழங்கி மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினர். ஆசிரியை திவ்யா நன்றி கூறினார். முன்னாள் ஆசிரியர் பிராங்கிளின், ஆசிரியை ராஜாமணி சார்பாக தங்க நாணய பதக்கம், என். ஆதிமூலம் பிள்ளை சரஸ்வதி அம்மாளுக்காக தேவிகாபெருமாள், முன்னாள் போலீஸ்காரர் அந்தோணி, சி. எஸ். ஐ தேவாலய பொருளாளர் ஜோன்ஸ்வாசு ஆகியோர் வெள்ளி பதக்கங்கள் வழங்கினர். நீலகண்டன் பிள்ளை ஜெயஜோதி அம்மாளுக்காக கவுன்சிலர் வக்கீல் சத்தியபிரகாஷ் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அன்பளிப்பு வழங்கினர். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.





