சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா பள்ளி ஒவ்வொரு தேசிய விழாவையும் புதிய கண்ணோட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு தெரியும் வகையில் அந்நிகழ்ச்சிகளை வித்தியாசமான முறையில் கொண்டாடி வருவது வழக்கம் அதனைத் தொடர்ந்து இன்று சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சர்வதேச சாக்லேட் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் திரு A.M. சேகர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி உற்சாகப்படுத்தினார் சாக்லேட் பெற்றுக் கொண்ட குழந்தைகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துபஞ்சவர்ணம், பொறுப்பாசிரியைகள் பாண்டிச்செல்வி, கல்பனா,சரண்யா,ஜூலியானா வென்னிலா,அகிலா ஆகியோர் செய்திருந்தனர்.