• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஏப்.23ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

ByA.Tamilselvan

Feb 13, 2023

மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் உலகபுகழ்பெற்ற சித்திரை திருவிழா வரும் ஏப்.23ல் துவங்குகிறது மே.5ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
சித்திரை திருவிழா மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருவிழாக்கள் முடிந்த பின்னர் சித்திரை மாதம் திருவிழா தொடங்கும். கொடியேற்றம் தொடங்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை வரைக்கும் பல லட்சம் பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்
மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், சித்திரை தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்குவதை காண தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.