• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனா

ByA.Tamilselvan

May 31, 2023

தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது சாதனை படைத்துள்ளது
தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது. அதன்படி சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது. இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். செயற்கைகோள் ஏவுதல் பணி முழு வெற்றி பெற்றதாகவும், அதில் உள்ள 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.