• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு

Byதரணி

Jan 10, 2023

திருநெல்வேலியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு.


திருநெல்வேலி மாவட்ட அளவில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் குழந்தைச் செல்வங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், குழந்தைகளுக்கு வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் பரிசு பெற்ற மாணவ,மாணவிகள் குறிக்கோள்கள் வெற்றியடைவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் மென்மேலும் பல சாதனைகள் புரியவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.