• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய காவல் துறை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

Byமதி

Nov 20, 2021

தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 44 கோடியே 30 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், காவல் துறைக் கட்டடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள பெண் காவலர் ஓய்வு இல்லத்தில் பெண் உதவி ஆய்வாளர் முதல் பெண் காவல் துணை கண்காணிப்பாளர் வரையிலானவர்கள் தங்குவதற்காக 86 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் தங்கும் அறைகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் – வாணியம்பாடியில் 54 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு; நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகம், நீலகிரி மாவட்டம் – குன்னூர், சோலூர்மட்டம், ஊட்டி இருப்புப்பாதை மற்றும் ஸ்டோன் அவுஸ், திருவள்ளூர் மாவட்டம் – கவரப்பேட்டை, தென்காசி மாவட்டம் – சேந்தமரம் ஆகிய இடங்களில் 40 கோடியே 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

மேலும், மதுரை மாவட்டம் – ஆஸ்டின்பட்டி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் – வெளிப்பாளையம் ஆகிய இடங்களில் 1 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டடங்கள், சேலம் மாவட்டம் – சேலம் மத்திய சிறை வளாகத்தில் 1 கோடியே 6 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 6 உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள், என மொத்தம், 44 கோடியே 30 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.