உசிலம்பட்டி அருகே தமிழக அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை எம்எல்ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்ட பகுதிக்கான மக்களுக்கு, மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமிற்கு தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, நக்கலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்விஜயா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இம்முகாமில் வீட்டுமனைபட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, கலைஞரின் கனவு இல்ல திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனர்.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக வருவாய்த்துறை , சுகாதாரதுறை, மின்சாரத்துறை, காவல்துறை, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், மகேஸ்வரன், விஏஓ முருகன், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
