• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் – அமைச்சர் சா.மு.நாசர்‌ பேட்டி…

ByR.Arunprasanth

Apr 28, 2025

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார் என்பதற்கு இது சிறந்த முன்மாதிரி என அமைச்சர் சா.மு.நாசர்‌ பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில், இத்தாலி ரோம் நகர் வாடிகனில் மறைந்த போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய, பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த
அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது..,

தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகிய நான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரடியாக மறைந்த போப் ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்த உத்தரவிட்டார். அதன்படி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

மதத்திற்கு அப்பாற்பட்டு மண்ணையும், மனிதனையும் நேசித்தவர் போப் ஆண்டவர்.
அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக மதத்திற்காக அர்ப்பணித்தவர். மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார். தென் அமெரிக்காவின் முதல் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 88 வயதிலும் தன் சமுதாய மக்களுக்காக வாழ்ந்தவர். மதங்களுக்கு அப்பாற்பட்டு நற்செயல்களை எடுத்துக் கூறியவர்.

உலகத்தில் உள்ள அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சரின் அறிவுரையின்படி தமிழ்நாடு அரசின் சார்பில் போப் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். கார்டினல்களும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார் என்பதற்கு இது சிறந்த முன்மாதிரி என தெரிவித்தார்.