• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி.!!.

ByA.Tamilselvan

Mar 2, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.. இதில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட அவர் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிமுகம் தென்படுவதால், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே , செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவருக்குத்தான் இந்த வெற்றியின் பெருமைகள் சென்று சேரும். ! ஏனெனில் திமுக கொடுத்த 80 சதவிகித வாக்குறுதிகளை அவரது ஆட்சியில் நிறைவேற்றியுள்ளார். அதற்கு அங்கீகாரமாக மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள். மதசார்பற்ற கூட்டணி குறிப்பாக ராகுல் காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ராகுலின் ஒற்றுமை நடைபயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுபோல வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு. ஈரோடு கிழக்குப் பகுதியில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. அமைச்சர் முத்துசாமி உடன் சேர்ந்து அரசின் உதவியோடு ஈரோடு மக்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்தார்