• Wed. Jan 22nd, 2025

இன்று துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

Byகாயத்ரி

Mar 24, 2022

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில் துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணி அளவில் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

அவருடன் எம்.எம்.அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் பயணம் செய்ய உள்ளனர். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது துபாய் கண்காட்சியில் தமிழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைப்பதுடன், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.

இந்த கண்காட்சியின்போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

மேலும் 28-ந்தேதி அபுதாபியில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 4 நாட்கள் துபாயில் தங்கி இருக்கும் மு.க.ஸ்டாலின் பின்னர் சென்னை திரும்புகிறார்.

\