விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமினை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷாம், நகராட்சி ஆணையாளர் நாகராஜன், இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் விதத்தில் 13 துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக மருத்துவம் துறை, வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறை, ஆதி திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நலத்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழில்துறை,
திறன் மேம்பாட்டு துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான பல்வேறு குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.